Wednesday, July 20, 2011

கான்ட்ரா முதலீடு என்றால் என்ன?

பங்குச்சந்தை மொழியில் சொல்லாமல் வெறும் பேச்சுவழக்காக சொன்னால் கான்ட்ரா முதலீடு என்பது.....எல்லோரும் ஒரு விதமாக யோசித்து செயல்படும் போது நாம் மட்டும் வித்தியாசமாக யோசித்து லாபம் பார்ப்பது. எடுத்துக்காட்டாக, எல்லோரும் வாங்கு வாங்கு என்று சொல்லும் பங்கை வாங்காமல் அதை விற்பதும். விற்று விடு என்று சொல்லும்போது வாங்குவதும் தான் கான்ட்ரா முதலீட்டின் ஸ்பெசல். அதுமட்டுமில்லாமல், ஒரு பங்கை அனைவரும் விற்கும்பொழுது அதன் மதிப்பு அடிமாட்டு விலைக்கு சென்றுவிடும். இவ்வாறான நிலையில் அப்பங்கை வாங்கி குவிப்பதுதான் கான்ட்ரா முதலீடு என்பார்கள். உதாரணமாக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்கு சில நாட்களுக்கு முன்பு விலை ரூ. 125 ஆக இருந்தது. இப்பொழுது அப்பங்கின் விலை ரூ. 741.75. ஆக விலை குறைந்த போது டாடா மோட்டார் பங்குகள் சிலவற்றை வாங்கி குவித்துள்ளீர்கள் என்றால் இப்பொழுது உங்கள் காட்டில் மழைதான். இப்படி மற்றவர்கள் யோசிப்பதற்கு எதிர்மறையாக யோசித்து லாபம் பார்ப்பது தான் கான்ட்ரா.

No comments:

Post a Comment