Wednesday, June 6, 2012

மனித உடல் பற்றி


  • ஆண்களின் கண் இமை துடிப்பினை விடவும் இரட்டிமடங்கு வேகத்தில் (தடவை) பெண்களின் கண் இமை துடிக்கின்றது.
  • பெண்களின் தலைமுடி ஆண்களின் முடியை விடவும் மெல்லியனவாம்.
  • அறிவாற்றல் கூடியவர் தலைமுடியில் அதிக செம்பு, நாகம் உலோகங்கள் அதிகமாக இருப்பது அறியப்பட்டுள்ளது.
  • சாதாரண மனிதனின் உயரம் காலையில் இருந்ததை விடவும் மாலையில் 1 cmகுறைவாக இருக்குமாம்.(இது மூட்டு பகுதிகளில் காணப்படும் இடைவெளி அமுக்கம் காரணமாக இல்லாது போவது இதற்கு காரணமா சொல்லப்படுகின்றது.)
  • மனிதனின் கண் இமையில் அண்ணளவாக 550 முடிகள் (மயிர்கள்) உள்ளன.
  • மனித உடம்பில் நாக்கிலுள்ள தசைகள் தான் தசைகளில் மிகவும் பலம் வாய்ந்தவை.
  • எமது நாக்கில் உள்ள சுவை உணரிகள் 10 நாட்களுக்கு ஒரு தடவை புதுப்பிக்கிறன.
  • வீடுகளில் காணப்படும் தூசியின் பெரும் பகுதி மனித உடலில் இருந்து புறப்பட்ட இறந்த தோல்களாகும்.
  • எமது உடம்பில் ஒரு செக்கன் காலத்தில் 15 மில்லியன் இரத்த சிவப்பு கலங்கள் அழிக்கப்பட்டும் உருவாக்கப்பட்டும் வருகின்றது.
  • ஒரு சாதாரண மனிதனின் உடலில் வாழ் நாளில் 10,000 கலன் உமிள்நீர் உற்பத்தியாகின்றது.
  • அதிக கரற் (Carrots) உண்டதன் பின்னர் மனித தோலின் நிறம் வெழுப்பாக (கரற் நிறத்தினை ஒத்ததாக) மாறுகின்றதாம்.
  • சராசரி மனிதர் ஒரு வருடத்தில் 10 மில்லியன் தடவை சுவாசிக்கின்றனர்.
  • மனித கையின் நடுவிரலின் நகங்கள் மிக வேகமாக வழர்கின்றன. சுட்டு விரல் தான் விரல்களிலேயெ உணர்சிகளை அதிகம் உணரவல்லது.
  • மனித உடலின் மொத்த எடை மனித மூலையை விட 40 மடங்கு பெரியது.
  • மனித எலும்புகளில் மிகவும் பலம் மிக்கது தாடை (முகப்பகுதி) எலும்புகளாகும்.
  • உடல் உறுப்புகளிலேயே கண் மட்டும் தான் பிறந்தவுடன் உள்ள அதே அளவில் எப்போதும் உள்ளது , மற்றய எல்லா உறுப்புகளும் வளர்ச்சியுடன் தொடர்ந்து மாறுபடுகின்றன.