Sunday, July 24, 2011

அரசு அறிவிப்புகள் மற்றும் சந்தை

வணக்கம் நண்பர்களே !
பங்கு சந்தையை பொறுத்த வரையில் சந்தையில் வாங்குபவர் மற்றும் விற்ப்பவர்களை பொறுத்து சந்தையின் ஏற்ற தாழ்வு இருக்கும் என்பது நாம் அறிந்த ஒன்று . ஆனால் சந்தைகள் மற்ற சில சமயங்கள் அரசு அறிவிப்பு மற்றும் அரசாங்கத்தின் நிதி சம்பந்தமான அறிவிப்புகள் மற்றும் நிதியமைச்சகத்தின் செயல்பாடு ஆகியவற்றை பற்றிய அறிவிப்புகள் மற்றும் முக்கிய டேட்டா வெளியிடும் போது சந்தைகள் மிகப் பெரிய எழுச்சி அல்லது சரிவுகளை சந்திக்கின்றன ..

இது இன்று புதிதாக வந்தது அல்ல .. நடை முறையில் உள்ளது தான் அதைப்பற்றி இந்த பகுதியில் பார்ப்போம் ...

* இன்பிலேசன்

* ஜி டி பி

* வர்த்தக அறிவிப்பு ( ட்ரேடு டேட்டா )

* ஐ ஐ பி டேட்டா

ஆகியவற்றை பற்றி விரிவாக பார்ப்போம் ...

* இன்பிலேசன் ...
********************
WHOLE SALE PRICE INDEX ---- WPI

மக்கள் பயன் படுத்தும் அத்தியாவசிய பொருட்களில் " 435 " பொருட்களை கணக்கில் எடுத்து கொண்டு அதன் தற்போதைய சந்தை விலை மற்றும் போன வாரத்தின் விலை ஆகிவற்றை கணக்கிட்டு சந்தை விலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தினை கணக்கிட்டு அறிவிப்பது தான் இன்பிலேசன் .. இது வாரம் ஒரு முறை வியாழன் அன்று வெளியாகும் .. இது அதிகரித்தால் சந்தைகள் பாதிக்கும் .. குறைந்தால் சந்தைகள் உயரும் .

காரணம் இன்பிலேசன் ( பண வீக்கம் ) சரியான அளவில் இருந்தால் நாட்டில் உள்ள அனைத்து துறைகளிலும் வாங்கும் சக்தி சீரான அளவில் இருக்கும் . நாட்டில் எந்த வித பண தட்டு பாடும் இருக்காது .

ஜி டி பி ====
*********************
C + I + G + N + X ---

C --- ( CONSUMAR SPENDING ) மக்களிடம் உள்ள வாங்கும் சக்தி ..
I --- ( INVESTMEND ) முதலீடு வகையறாக்கள் ..
G --- ( GOVERMENT EXPENDITURE ) அரசாங்க வரவு செலவுகள் ...
NX --- ( NET EXPORT ) மொத்த ஏற்றுமதிகள் ..

* இந்த முறையில் ஜி டி பி ஐ கணக்கிடலாம் ..

**** ஜி டி பி ஐ இரண்டு முறைகளாக பிரிக்கலாம் .

1 . NORMAL GDP --- C + I + G + NX = இந்த முறைப்படி வருவது ..

2 . REAL GDP ----- ஒரு வருடத்தின் விலைகளை அடிப்படையாக கொண்டு பொருட்களின் ஏற்ற இறக்கங்களை வைத்து கணக்கிடுவது ..

டேபிலேசன் -- ( DEFLATION )
***************************************
DEFLATION என்பது காரணமில்லாமல் பொருட்களின் விலைகள் தொடர்ந்து இறங்கிக்கொண்டே வருவது . அவ்வாறு இறங்கிக்கொண்டே இருந்தால் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை மிகவும் குறைத்து விடும் அந்த சமயத்தில் நமது வங்கிகளும் இருப்புக்கான வட்டி விகிதத்தை மிகவும் குறைத்து விடும் ஏன் சமயத்தில் வட்டி கிடைக்காமல் கூட போகலாம் . ஆனால் இது வளர்ந்த நாடுகளில் சாத்தியம்..
நமது நாட்டுக்கு இந்த நிலை பொருந்தாது .. சில வருடங்களுக்கு முன் ஜப்பானில் இந்த நிலை இருந்தது குறிப்பிடலாம் .

ட்ரேடு டேட்டா ---- நாட்டின் வர்த்தகத்தின் அறிவிப்பு ..
***********************************************************
ஒரு நாட்டின் ஏற்றுமதி அதிகரித்து இறக்குமதி குறைந்து இருக்க வேண்டும் . அப்பொழுது தான் அந்த நாட்டின் ஜி டி பி அதிகரிக்கும் இவ்வாறு நடந்தால் " BALANCE OF TRADE " இன் இடைவெளி குறையும் .. இல்லையெனில் இறக்குமதி செய்யும் நாட்டின் ஜி டி பி தான் அதிகரிக்கும் . BALANCE OF TRADE " இன் இடை வெளி அதிகரிக்கும் ..

ஐ ஐ பி டேட்டா ------------
*********************************

ஐ ஐ பி டேட்டா என்பது ஒரு நாட்டின் உள்நாட்டு உற்பத்தி , தயாரிப்பு ஆகியவற்றின் வர்த்தக நடவடிக்கைகளின் அடிப்படையில் கணக்கிடப்படுவது ஆகும் . அதன் அளவு அதிகரிக்க அதிகரிக்க நாட்டின் பிற தொழில்துறை அமைப்புகளின் செயல் பாடுகள் சிறப்பாக இருக்கும் ..

நமது நாட்டை பொறுத்த வரை ஒரு தொழிலை சார்ந்து பல தொழில்கள் அடிப்படையாக வர்த்தகத்தில் உள்ளன .. அப்படி பார்த்தால் ஐ ஐ பி நன்றாக இருக்க தொழிற்சாலைகளில் உற்பத்தி , விவசாய உற்பத்தி , துணி வகைகள் உற்பத்தி , ஆகியவை நன்றாக இருந்தால் ஐ ஐ பி டேட்டா நன்றாக இருக்கும் ..

அடுத்தது முக்கிய கட்டமான அரசின்...
" FISCAL DEFICIT " --------- ( அரசின் நிதி பற்றாக்குறை ) ...
************************************************************
FISCAL DEFICIT ஐ இரண்டு விதமாக பிரிக்கலாம் .

- REVENUE DEFICIT --
************************

அரசு செய்யும் அத்தனை செலவுகளுக்கும் ( அன்றாட செலவு மற்றும் முதலீட்டு செலவு ) வரும் வருமானத்துக்கும் உள்ள இடை வெளி தான்.
அல்லது வரவுக்கு மீறிய செலவு என்றும் வைத்து கொள்ளலாம் ..

--REVENUE SURPLUS --
*************************
அரசு செய்யும் செலவுகளை விட வரவு அதிகமாக இருத்தல்

REVENUE DEFICIT ---
*************************
ஒரு நாட்டின் அரசிடம் " REVENUE DEFICIT " அதிகமாக இருந்தால் அந்த நாடு கஷ்டத்தில் உள்ளது அர்த்தம் .வரவுக்கு மீறிய செலவு என்றால் கடன் வாங்கி தான் நாட்டை நடத்த வேண்டும் .. மக்களிடம் அல்லது ஆசியாவளர்ச்சி வங்கி அல்லது உலக வங்கி அல்லது வெளிநாட்டில் கடன் வங்கி நாட்டினை நடத்த வேண்டிய சூழல் உருவாகும் ...

நாட்டில் " REVENUE DEFICIT " எப்பொழுதும் இருந்தே வந்துள்ளது . ஆனால் அது அளவோடு இருந்தால் பரவாயில்லை . மிக குறைவாகவும் அளவுக்கு அதிகமாகவும் போக கூடாது . அப்படி அளவோடு இருந்தால் வரும் பற்றாக்குறையை மக்களிடம் (வரி மூலம் ) பெற்று சரி செய்யலாம் ..

"REVENUE DEFICIT " அதிகமாக இருந்து மக்களிடம் சேமிப்பும் இல்லாமல் இருந்தால் வெளிநாட்டில் தான் கை நீட்ட வேண்டும் ..

REVENUE SURPLUS ---
************************
நாட்டின் செலவை விட வரவு அதிகமாக இருந்தால் அரசு பட்ஜெட்டில் புதிதாக வரிகள் எதுவும் போட வேண்டியது இல்லை .. " REVENUE DEFICIT " குறைவாக இருக்கும் . பிரச்சனை எதுவும் இல்லை . பொருளாதார சூழ்நிலை நன்றாக இருக்கும் ..

அடமானம் பங்குகள்

இப்போது சந்தையிலும் மற்ற இடங்களிலும் பரபரப்பாக பேசப்படும் விஷயம் இது தான் பங்குகள் அடமானம் ..

பங்குகள் அடமானம் என்றால் என்ன ?

சில நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தை நடத்த முடியாமல் (அ) செலவுகளை சமாளிக்க முடியாமல் போகும் சமயத்தில் சில மெர்சன்ட் வங்கிகளிடம் ( மெர்சன்ட் வங்கிகள் என்பது பங்குகளில் முதலீடு மற்றும் வணிகம் மேற்கொள்ளும் நிறுவனங்கள் . இது அந்தந்த வங்கிகளின் சம்பந்தமான தனி பிரிவு . உதா ; இந்தியன் வங்கி , ஐ சி ஐ சி ஐ வங்கி , பஞ்சாப் நேசனல் வங்கி , பேங்க் ஆப்இந்தியா , மற்றும் பல வங்கிகள் உள்ளன .) சில நிறுவனங்கள் பண தேவைக்காக தங்களிடம் உள்ள பிரமோட்டார் பங்குகளில் குறிப்பிட்ட அளவு (அ ) தேவைக்கு ஏற்ப பங்குகளை அடமானம் வைத்து பணம் வாங்கி செலவு செய்து பிரச்சனைகளை சரி செய்யும் . இதுவே பங்குகள் அடமானம் எனப்படுவது .

நிறுவனம் சரிவர பிரச்சனைகளை முடித்து சரி செய்து லாபம் வந்ததும் பங்குகளை திருப்பி கொள்ளும் ..ஆனால் நிலைகளை சமாளிக்க முடியாமலும் (அ ) சந்தையில் அந்த பங்குகளின் விலை திடீரென சரிந்தாலோ சம்பந்தப்பட்ட வங்கி நிறுவனங்கள் அந்த நிறுவனத்தின் பங்குகளை லாப நோக்கு அல்லாமல் சந்தை விலையில் விற்று விடும் சந்தை சரிவில் இருந்தாலும் கூட

தற்சமயம் செபிஅறிவிப்பில் இது போல அடமானம் வைக்கும் நிறுவனங்கள் எவ்வளவு பங்குகள் என்ற விவரங்களை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது .அந்த உத்தரவு மெர்சன்ட் வங்கி நிறுவனங்களுக்கும் பொருந்தும் .

செபி ஏன் இப்பொழுது இதை செயல்படுத்துகிறது என்றால் சத்யம் நிறுவன பங்குகள் இது போல தான் ( அடமான பங்குகளை) மெர்சன்ட் வங்கி நிறுவனங்கள்சரிவில் அந்த நிறுவன பங்குகளை விற்று விட்டது என்று செய்தி உள்ளது .

சமீபமாக அடமானம் வைக்கப்பட்ட பங்குகள் சில ...ஆனால் எண்ணிக்கை இல்லை ..TATA POWER , JSW STEEL , DR REDDY'S LAB ,NET WORK 18 ,UTV SOFTWARE , ABAN OFF SHORE ,ASIAN PAINT , MIND TREE. மற்றும் பலஇது தங்களின் தகவலுக்காக மட்டுமே .

 இதை வைத்து இந்த பங்குகள் சரியில்லை என எந்த முடிவும் எடுக்க வேண்டாம் ..

நன்றி !!!

அந்நிய முதலீட்டாளர்களின் ஆதிக்கம் ஏன் ?


நமது சந்தைகளை பொறுத்த வரை அந்நிய முதலீட்டாளர்கள் மற்றும் ஆப்ரேட்டகளின் ஆதிக்கம் தொடர்ந்து சந்தைகளை வழி நடத்தி செல்கிறார்கள் . இது பிற்காலத்தில் நமது சந்தைகளை பலமில்லாமல் ஆக்கி விடும் என கருதுகிறேன்

அந்நிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து நமது சந்தைகளில் முதலீடு செய்துவருவது கடந்த சில மாதங்களாகவே அதிகரித்துக் கொண்டே வருகிறது . ஏன் அவர்களுக்கு வேறு முதலீடு வாய்ப்புகள் இல்லையா .

இன்னும் நமது சந்தைகளின் உயர்வில அவர்கள் முதலீடு செய்து கொண்டே வர காரணம் என்ன ?
உலக சந்தைகளை மிஞ்சிய சந்தைகள் என்றால் அது நமது சந்தைகள் தான் . மற்ற சந்தைகள் உயர்வின் பொழுதும் மற்றசந்தைகள் சரிவின் பொழுதும் நமது சந்தைகள் உயர்ந்து வருவதும் நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் . மேலும் நாட்டின் எதிர் கால வளர்ச்சி என்று என்று அரசு மார்தட்டி கொள்கிறது .

அப்படி ஒன்றும் எதிர் காலத்தில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்ப்பட போவதாக தெரியவில்லை . துறை வரியாக எடுத்துக் கொண்டாலும் கட்டுமானம் மற்றும் கச்சா என்னை சம்பந்தமான் துறைகள் சற்று வளர்ச்சி குறையவே வாய்ப்புகள் உள்ளன .

மேலும் ரிசர்வ் வங்கி ஆளுநர் அவர்கள் இந்தாண்டு மார்ச்க்குள் இன்பிலேசன் + 6% ஐ எட்டும் என்று கூறுகிறார் . அவ்வாறு வரும் பட்சத்தில் மேற சொன்ன இரண்டு துறைகளும் கடுமையாக பதிக்கப்படும் அபயம் உள்ளது .

மேலும் ரிசர்வ் வங்கி கடன் தொகைக்கான வட்டி குறைக்கவும் நமது வங்கிகள் கடனுக்கான வட்டியை அதிகரிக்க மற்றும் டெபாசிட் இக்கான வட்டியை குறைக்கவும் வாய்ப்புகள் உள்ளன .

அவ்வாறு நிகழும் பட்சத்தில் மேலும் தொழில் வளர்ச்சி பதிக்கப்படும் அபாயம் உள்ளது .மற்றும் இப்பொழுது சரிவர நடந்து வரும் தொழில்களும் பாதிக்கும் .

ஆக அந்நிய முதலீடு தொடர இது காரணமல்ல ////

மேலும் அவர்கள் முதலீடு செய்யும் அளவினை செபி அதிகரித்து வர காரணம் என்ன ?
அரசின் முக்கிய ஆவணமான அந்நிய முதலீட்டாளர்களின் ( P NOTES ) பங்கேற்ப்பு ஆவணத்தில் சில கவன சிதறல்கள் மற்றும் அரசியல் தலையீடுகள் மற்றும் வெளியே கூற முடியாத சிற்சில விசயங்கள் காரணமாக இவ்விசயங்கள் தொடர்ந்து மூடி மறைக்க படுகின்றன .

மேலும் போன முறை ' p notes ' ஐ காரணமாக அந்நிய முதலீட்டாளர்கள் முதலீடு வேறு நாட்டுக்கு செல்ல உள்ளதாக கூறி சந்தைகள் பெரும் சரிவினை கண்டது .அதையாரு மறந்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன் . அவ்வாறு செய்யப்படுவது எல்லாம் சில சித்து விளையாட்டுகள் தான் என நினைக்கிறேன்

ஆனால் அரசு இந்த விசயத்தில் சற்று அதிககவனம் எடுத்து அந்நிய முதலீட்டாளர்களின் போக்கினை சற்று கட்டு படுத்தினால் சந்தைகளில் அதிக பாதிப்பின்றி ஒரே சீராக செல்லும் ......

சந்தைகள் மேல் நோக்கி செலுத்தப்பட வேண்டிய கட்டாயம் என்ன ?

நமது சந்தைகளை பொறுத்த வரையில் நமது மக்களும் இன்னும் சற்று அறிய பருவத்திலேயே உள்ளனர் காரணம் என்று பார்த்தால் சந்தைகள் உயர்வின் பொழுது அதிக விலை கொடுத்து வாங்கி வைத்து விட்டு பின்னர் வருத்தப்படும் சூழ்நிலை போன இரண்டாயிரத்து எட்டில் வந்தது ஆனால் அந்த சூழ்நிலைகளில் மக்களின் போக்கினை அந்நிய முதலீட்டாளர்கள் மாற்றி விட்டு ஒவ்வொரு உயர்விலும் நம் முதலீட்டாளர்களை வாங்கும் முறைக்கு திருப்பி சந்தைகளின் உயர்வினை உறுதி செய்கிறார்கள் .

ஆனால் அவ்வாறு சந்தைகள் உயர்த்தப்படுவது அவர்களின் ஆதயத்திர்க்காக என்று நமது முதலீட்டாளர்களும் புரிந்து கொள்ள வேண்டும் . சற்று பொறுமையாக சந்தைக்குள் முதலீடு செய்ய வேண்டும் .

மீளும் சந்தைகள் அதிகமாக உயர்ந்ததும் சந்தைகளில் இருந்து வெளியேற வேண்டும் . அல்லது லாபத்தினை உறுதி செய்ய வேண்டும் . அங்கு அந்த நிலையில் உள்ளே செல்ல கூடாது .அங்கு நமது முதலீட்டாளர்களை உள்ளே வர வைக்க சில தற்காலிக உயர்வுகள் சந்தையில் திடீரென கொண்டு வரப்படுகிறது அதை அறிந்து முதலீடு செய்ய வேண்டும் .

பங்குகளின் விலைகள் சற்றும் அதிகரிக்காமல் சந்தைகளை மட்டும் உயர்த்துவது ஏன் ?
இது தான் முக்கியமான ஒரு விஷயம் ஆனால் இந்த விசயத்தினை முதலீட்டாளர்களும் ஏன் அரசும் செபியும் கண்டு கொண்டதாக தெரியவில்லை அல்லது கண்டு கொள்ளாதது சற்று எனக்கு வியப்பினை அளிக்கிறது .

சந்தைகளில் உயர்வு என்பது நாம் சராசரி அனைவர்க்கும் தெரிந்து இருப்பது பங்குகள் விலைகள் உயர்ந்து இருக்கும் என்பதே . ஆனால் தற்போதைய நமது சந்தைகள் இதற்கும் துளியும் சம்பந்தமில்லை .

காரணம் அந்நிய முதலீட்டலர்களுடன் சில தனியார் மற்றும் சில இன்சுரன்ஸ் முதலீடு நிறுவங்களும் கை கோர்த்துள்ளன ,அவர்கள் சந்தைகளில் சில பங்குகளின் விலைகளை மட்டும் செயற்கையாக உயர்த்தி சந்தையினை மேலே கொண்டு செல்கின்றனர் .

அதுவும் குறிப்பாக ப்ளூ சிப் கம்பெனி பங்குகள் மட்டும் உயந்து பல பங்குகளை உயர் செய்யாமல் செய்கின்றர்னர் பின்னர் சந்தையில் இன்டெக்ஸ் மட்டும் உயராமல் என்ன செய்யும் இப்படியே போனால் அந்நிய முதலீட்டாளர்களும் ஆபரேட்டர்களும் தான் சந்தையில் இருப்பார்கள் ..

இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒருவர் ஒரு நாளில் வாங்குதல் மற்றொருவர் விற்றல் என திடர்ந்து இவர்கள் விளையாட்டினை தொடர்ந்து வருகிறார்கள் . மேலும் இந்த இருவருக்கிடையில் சந்தையில் ஆபரேட்டர் மற்றும் ச்பெகுலேட்டார் களும் சேர்ந்து நம் முதலீட்டாளர்கள் அனைவரையும் சந்தையில் இருந்தே வெளியேற்றி விடுகிறார்கள் .

நமது மக்களும் வரும் பொழுது பார்த்துக் கொள்ளலாம் என போட்டு வைத்த பங்குகள் பல கோடி இருக்கலாம் .

சரி முதலீட்டாளர்கள் பாடு இப்படி தினசரி வர்த்தகர்கலாவது கொஞ்சம் சம்பாதிக்கிறார்கள் என்றால்அதுவும் கிடையாது .அவர்களையும் வர்த்தகத்தின் இடையில் அதிக பட்ச விலைகளை தாண்டி வர்த்தகம் ஆகியும் குறைந்த பட்ச விலைகளை உடைத்து வர்த்தகம் ஆகியும் அவர்களையும் குழப்பி அவர்கள் சம்பாதிக்க மட்டுமல்லாது உள்ளதையும் விட்டு விட்டு சந்தையை விட்டே வெளியேற்று கின்றனர் .

இது தான் தற்சமயம் அக்டோபர் மாதத்திற்கு பிறகு சந்தையில் நடந்து வரும் வர்த்தகம் . சரி சந்தையில் சம்பதிதவர்களே இல்லை யா என்ற பார்த்தால் இருக்கிறார்கள் பக்குவம் அடைந்த சந்தை பற்றிய முழு அறிவு பெற்றவர்கள் மட்டும் சம்பாதிக்கிறார்கள் ..

கடைசியாக ஒன்று செபி இந்த விசயத்தினை மேலும் கண்டு கொள்ளாமல் விட்டால் நமது சந்தைகள் அதல பாதாளத்திற்கு கொண்டு சென்று நமது முதலீட்டலர்களையும் சந்தையில் இருந்தே வெளியேற்றி விடுவார்கள் அன்பான அந்நிய முதலீட்டாளர்கள்

Friday, July 22, 2011

வர்த்தக உலகம்


. முகப்பு விலை என்றால் என்ன? (What is meant by Face Value?)
IPO என்றால என்ன என்பத பார்த்தோம. இதில், ஒர நிறுவனம முதன முதலாக பங்குகள வெளியிடும்பொழுத அதற்க முகப்ப வில ஒன்ற நிர்ணயித்த வெளியிடுவார்கள.
உதாரணத்திற்க, போக்கஸ (Focus) என்ற நிறுவனத்த எடுத்துக்கொள்வோம (நினைவில இருக்கட்டும, இத உதாரணம !). இந்நிறுவனத்தை நடத்த அவர்களுக்க பணம தேவ. அதை திரட்ட புதிய பங்குகள (Shares) வெளியிடுவார்கள. அவ்வாறு வெளியிடப்படும பங்குக்க ஒர முகப்ப விலைய நிர்ணயம செய்த வெளியிடுவார்கள, ஒர பங்குகின வில ருபாய பத்த (Rs. 10) என்ற. அதாவத பத்த பங்குகள வாங்கினால நூற ருபாய. இத சந்தையில யார வேண்டுமானலும வாங்கிக்கொள்ளலாம. அதென்ன பத்த ருபாய பங்க என்ற உங்களுக்க தோன்றும !.. அதையும் பார்ப்போம.
மேலே கூறப்பட்ட போக்கஸ என்பத மிக சிறிய நிறுவனம. அந்நிறுவனம் பங்குகள வெளியிடும்பொழுத, ஒர பங்கின வில பத்த ருபாய என்ற சிறிய தொகைய நிர்ணயம செய்வார்கள. ஏனென்றால அந்நிறுவனத்த நம்பி யாரும அதி வில கொடுத்த வாங்க மாட்டார்கள. அது போலதான நிறைய சிற நிறுவனங்கள குறைந்த விலையில பங்குகள வெளியிடுவார்கள.
வித்-பிரிமியம் என்றால் என் ? (What is meant by With-Premium?)
உதாரணத்திற்க இன்போஸிஸ் (Infosys) நிறுவனத்த எடுத்துக்கொள்வோம. அவர்கள் சந்தையில மிகப்பெரிய நிறுவனம. அது மட்டுமில்ல லாபம கொழிக்கும நிறுவனம என்ற சொன்னால மிகையாகாத. அப்படிபட்ட நிறுவனம புதிய பங்குகள வெளியிடுகிறார்கள என்றால அதற்க ஏகப்பட்ட கிராக்கி உண்ட. நீ-நான என்ற போட்டி போட்ட கொண்ட வாங்குவார்கள. அவ்வாறான நிறுவனங்கள பத்த ருபாய பங்குக்க ஆயிரம ருபாய அதிக வில (Rs. 1000 more) வைத்த விற்பார்கள. அதாவது ஆயிரத்த பத்த ருபாய (Rs 10+1000=1010) என்ற. இதை வித்-பிரிமியம (With-Premium) என்பார்கள.
Prospectus என்றால் என் ?
ஒரு நிறுவனம பங்குகள வெளியிடும முன prospectus தயார செய்ய வேண்டும. அதில கீழ காணும விவரங்கள விளக்கப்பட்டிருக்க வேண்டும,
  • வெளியிடப்படும பங்களைப்பற்றி முழ விவரம. (Details of share)
  • திரட்ட படும பணத்தின மூலம என்ன வியாபாரம செய்வார்கள.
  • அதன மூலம அவர்கள பெற நினைக்கும லாபம.
  • லாபத்த பகிர்ந்த எவ்வளவ டிவிடண்ட தருவார்கள. (What is the dividend?)
  • கடந்த காலத்தில எவ்வளவ டிவிடண்ட கொடுத்திருக்கிறார்கள.
  • போனஸ பங்குகள கொடுத்திருக்கிறர்கள. (Bonus share)
சரி னால் முதலீட்டாளருக்க என்ன பயன என்கிறீர்கள?… சரியான கேள்விதான…. ஒர முதலீட்டாளர எந்த பங்க வாங்கலாம என்ற முடிவ செய்வதற்க முன இவ்வறான prospectus படித்த தெரிந்த கொள்வத மிக அவசியம. ஒர நிறுவனத்தின பங்க வாங்கினால நமக்க லாபம கிடைக்கும?, டிவிடண்ட கிடைக்கும?, போனஸ பங்குகள கிடைக்கும? போன்ற கேள்விகளுக்க prospectus ஓரளவுக்க பதில சொல்லி விடும. கவனம், சில நேரங்களில நட்டமும ஏற்ப்படலாம, அத சந்தையின நிலவரத்த பொறுத்த மாறுபடும. Prospectus தயார செய்வதற்க சில விதி முறைகள உள்ளத. இவ்விதி முறைகள செ.ி (SEBI) வகுத்துள்ளார்கள்.
அலாட்மெண்ட் என்றால் என்ன? (What is meant by Allotment?)
உதாரணத்திற்கு இன்போஸிஸ் நிறுவனம் (Infosys Technologies) ஏழாயிரம் கோடி ருபாய்க்கு பங்குகள் வெளியிடுகிறார்கள் (Issues stocks) என்று வைத்துக்கொள்வோம். அவ்வாறான செய்தி வெளியானதும், பங்குகளை (shares) வாங்க நிறைய பேர் விண்ணப்பம் செய்வார்கள். சிலர் நூறு பங்குகள் வேண்டியும், சிலர் ஆயிரம் பங்குகள் வேண்டியும் விண்ணப்பங்கள் வந்து குவியும். அதுவும் இன்போஸிஸ் போன்ற பெரிய நிறுவனம் என்றால் சொல்லவா வேண்டும்.
அப்படி கோரப்பட்ட பங்குகளின் மதிப்பு ஏழாயிரம் கோடிக்கு மேல் குவிந்துள்ளது என்றால் பங்குகளை அலாட்மெண்ட் முறையில் ஒதுக்குவார்கள்.  ஆதாவது ஒருவர் நூறு பங்குகள் கோரினால் நூறுமே கிடைக்காது, ஐம்பது கிடைக்கலாம், இருபது பங்குகள் கிடைக்கலாம். ஏன் சில நேரங்களில் கிடைக்காமலே கூட போகலாம். இவ்வாறு ஒதுக்கப்படும் பங்குகளை அலாட்மெண்ட் எனபார்கள்.

நான் சமீபத்தில் வெளியான ரிலையன்ஸ் பவர் (Reliance Power) பங்குகளை வாங்க விண்ணப்பம் செய்தேன். என்னைப்போல் நிறைய பேர் ஆர்வமான விண்ணப்பித்தார்கள். இறுதியில் ரிலையன்ஸ் பங்குகள் எனக்கு கிடைக்க வில்லை.
 பங்குச்சந்தையில் ஓவர்-சப்ஸ்கிரைப்டு என்றால் என்ன? (What is meant by over subscribed?)
உதாரணமாக .சி..சி. (ICICI) நிறுவனம் ஐந்தாயிரம் கோடி ருபாய்க்கு பங்குகள் (Issues stock) வெளியிடுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். .சி..சி. நிறுவனம சந்தையில மிகப்பெரிய நிறுவனமாகும. அப்படியொர நிறுவனம புதிய பங்குகள வெளியிடுகிறார்கள என்றால, அத வாங்க ஏகப்பட்ட கிராக்கி ஏற்ப்படும. நீ-நான என்று நிறைய பேர போட்டிப்போட்டுக கொண்ட வாங்க விண்ணப்பிப்பார்கள. இப்பொழுத ஐந்தாயிரம கோடி ருபாய்க்க பங்குகள வெளியிட்ட .சி..சி.-க்க ஒன்பாதாயிரம கோடி ருபாய்க்க பங்குகள கோரப்பட்ட விண்ணப்பங்கள வந்த குவிந்துள்ளத என்றால, அத ஓவர சப்ஸ்கிரைப்டு (Over subscribed) என்பார்கள.
அத எப்படி என்கிறீர்களா ?. இப்படிப்பட்ட பெரிய, லாபம கொழிக்கும நிறுவனங்கள புதிய பங்குகள வெளியிடுகிறாகள என்றால, சும்மாவ?… நிறைய பேர விண்ணப்பம செய்வார்கள. இப்படிபட்ட உண்மையான சம்பவங்கள் ஏராளம்.
அன்டர் சப்ஸ்கிரைப்டு என்றால் என்ன ? (What is meant by Under-subscribed?)
ஒர நிறுவனம புதிய பங்குகள (Issue stocks) வெளியிடும பொழுத, அதற்க முதலீட்டாளர்களின போதிய வரவேற்பில்லாமல ஒர குறிப்பிட்ட சதவிகதற்க (percentage) பங்குகள கோரப்பட வில்ல என்றால, அத அன்டர சப்ஸ்கிரைப்ட (Under subscribed) என்பார்கள. செ.பி-யின (According SEBI rules) விதிமுறைப்படி, அவ்வாறான பங்க வெளியீட்ட ரத்த (Cancel) செய்துவிட்ட, முதலீட்டாளர்களுக்க பணத்த திருப்பிக்கொடுக்க வேண்டும.